தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி சாவு
கெங்கவல்லி அருகே தெடாவூரில் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சைப் பலனின்றிஉயிரிழந்தார்.
கெங்கவல்லி அருகே தெடாவூரில் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சைப் பலனின்றி
உயிரிழந்தார்.
கெங்கவல்லி அருகே தெடாவூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் தினேஷ் (20), அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகள் செல்வமணி (20). ஒரே சமூகத்தைச் சேர்ந்த பட்டதாரியான இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து இருவரது பெற்றோர்க்கும் தெரியவந்தது. இந்நிலையில், இவர்களிருவரும் சகோதர உறவு என்பது தெரியவந்ததையடுத்து, காதலித்த இருவரும் மனமுடைந்து காணப்பட்டனர். இதில், செல்வமணி கடந்த 4-ஆம் தேதி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், கடந்த 9-ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், களைக்கொல்லிக்கு வைத்திருக்கும் பூச்சிமருந்தை தினேஷ் குடித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் தினேஷ் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.