சேலம்

குடிநீர் பற்றாக்குறையைக் போக்கக் கோரி திமுக ஆர்ப்பாட்டம்

DIN


தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை  சரிசெய்யாத தமிழக அரசைக் கண்டித்து சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலக வளாகம் முன் திமுக சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலர் எஸ். ஆர். சிவலிங்கம் தலைமை வகித்தார். சங்ககிரி ஒன்றிய நிர்வாகி ராஜேஷ் வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் கோபால், மாவட்ட துணைச் செயலர் சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ஆர். வரதராஜன், முன்னாள் ஒன்றியச் செயலர் பி. தங்கமுத்து, மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.நிர்மலா, இளைஞரணி நிர்வாகி கமலக்கண்ணன், இளைஞரணி முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் அருணாசலம்,  எடப்பாடி நகரச் செயலர் பாஷா, ஆர்.ரவி,  சசிகுமார், வழக்குரைஞர்கள் அணித் துணை அமைப்பாளர் வி.என். ராஜா, சங்ககிரி நகரச் செயலர் (பொறுப்பு) குப்புசாமி,  நகர இணைச் செயலர் சங்கரன், சங்ககிரி, மகுடஞ்சாவடி, எடப்பாடி, தாரமங்கலம், மேட்டூர்  உள்ளிட்ட  ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த திமுக  நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகியோர் நீர் மேலாண்மையை ஏற்படுத்தி அனைத்து மக்களுக்கும் முறையாக குடிநீர்  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,  திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட குடிநீர் திட்டங்களை செப்பனிட்டு பராமரித்து தமிழகத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT