சேலம்

தார்ச் சாலை அமைக்கக் கோரி மலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

DIN

ஏற்காட்டில் மண் சாலையை தார்ச் சாலையாக அமைக்கக் கோரி மலைகிராம பழங்குடியின மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்  வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சி உட்பட்ட நார்த்தஞ்சேடு, செந்திட்டு,அரங்கம், சின்னமதூர்,மதூர், பெலாக்காடு கேளையூர் ,மாவூத்தூர், குட்டமத்திக்காடு உள்ளிட்ட  17 கிராம, குக்கிராம  பழங்குடியின மக்கள்  கொட்டச்சோடு முதல் செந்திட்டு வரை 3 கிலோ மீட்டர் தொலைவில் பயன்படுத்தும் தனியார் மண் சாலையை தார்ச் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  எனக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சுமார் 350-க்கும் மேற்பட்ட ஆண்கள் ,பெண்கள் பேரணியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்றனர். பின்பு  ஏற்காடு வட்டாட்சியரிடம் கிராம  பழங்குடியின மக்கள் சார்பில்  கண்ணாடி ராஜி, கிருஷ்ணன், ராவி ஆகியோர் தலைமையில்  கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT