சேலம்

ஆசிரியர்களுக்கு அணுகுமுறை பயிற்சி

DIN

கெங்கவல்லி,தம்மம்பட்டியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் அணுகுமுறை பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள தொடக்கநிலை  ஆசிரியர்களுக்கு  செயல்வழிக்கற்றலில் புதிய  அணுகுமுறை,எளிய படைப்பாற்றல் கல்வி, அகராதி பயன்பாடு ஆகிய தலைப்புகளில் முதல்கட்ட ஒருநாள் பயிற்சி வெள்ளிக்கிழமை தம்மம்பட்டி, கெங்கவல்லியில் நடைபெற்றது.      தம்மம்பட்டியில் நடைபெற்ற பயிற்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் அந்தோணிமுத்து தலைமை வகித்தார். பயிற்சியை ஆசிரியப் பயிற்றுநர் பச்சையம்மாள், ஆசிரியை மணிமேகலை ஆகியோர் வழங்கினர். இதில் 44 ஆசிரிய,ஆசிரியைகள் பங்கேற்றனர். கெங்கவல்லி 2ஆவது வார்டு துவக்கப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சிகளை ஆசிரிய பயிற்றுநர் செல்வராஜ், ஆசிரியர் சுப்ரமணி ஆகியோர் வழங்கினர். இந்த மையத்தில் 36 ஆசிரிய,ஆசிரியைகள் பங்கேற்றனர். இரண்டாம் கட்ட பயிற்சி சனிக்கிழமை  கெங்கவல்லி,தம்மம்பட்டியில் நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT