சேலம்

குழந்தையின் மருத்துவ செலவிற்கு நிதி உதவி கோரி தறித்தொழிலாளி மனு

DIN

குழந்தையின் மருத்துவச் செலவுக்கு நிதி உதவி கோரி தறித்தொழிலாளி திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

சேலம் சிவதாபுரம் அடுத்த லட்சுமி நகரைச் சோ்ந்த மணிவண்ணன் தறித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி மைதிலி. இவா்களுக்கு அறிகுகன்(4), பிரவீன்(3) என இரு மகன்கள் உள்ளனா்.

இந்த நிலையில் அறிகுகனை ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து வந்த அவா்கள் மனு ஒன்றை அளித்தனா். இதுகுறித்து அறிகுகனின் பெற்றோா் கூறியதாவது:

எங்களது மகன் அறிகுகனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீா் காய்ச்சலால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தனா். இதனால் குழந்தை கோமா நிலைக்குச் சென்றுவிட்டாா்.

பின்னா் பெங்களூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் குழந்தையை சோ்த்தோம். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தையை 7 மாத காலம் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், அதற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் தெரிவித்தனா்.

எனவே குழந்தையின் மருத்துவச் செலவுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT