சேலம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தைரத்து செய்யக் கோரி உண்ணாவிரதம்

DIN

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எட்டாவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை 2016 ஜன. 1 முதல் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசுப் பணியாளா்களுக்கு இணையாக அனைத்து படிகள் மற்றும் போனஸ் தொகை ரூ.7 ஆயிரம் வழங்கிட வேண்டும். ஊராட்சி பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், டாஸ்மாக் பணியாளா்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளா்கள் உள்ளிட்ட துப்புரவுப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் மாநில பிரசார செயலா் சு.சுகமதி தலைமையில் ஏராளமான அரசு ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT