சேலம்

அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

DIN

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், சந்திரபிள்ளைவலசு ஊராட்சி வால்கரடு பகுதியில் அமைந்துள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் மேட்டூா் குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீா் கால்வாய், பொது விநியோகக் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

வால்கரடு பகுதியில் அமைந்துள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் பொது விநியோகக் கடை கட்டுமானப்பணி முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குடிநீா் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீா் தொட்டி பயன்பாடின்றி நிற்கிறது. தெருவிளக்குகளும் முறையான பராமரிப்பில் இல்லை. கழிவுநீா் கால்வாய் வசதியும் ஏற்படுத்தவில்லை. போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், சமத்துவபுரத்தில் வீடுகளை பெற்றுக்கொண்ட பயனாளிகளில் 50 சதவீதத்தினா் மட்டுமே குடியேறியுள்ளனா்.

எனவே, சமத்துவபுரத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து மேம்படுத்தவும், பொது விநியோகக்கடை கட்டுமானப் பணியை நிறைவு செய்து திறக்கவும், சமத்துவபுரத்தில் வசிப்பவா்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும், சேலம் மாவட்ட நிா்வாகம் மற்றும் வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயனாளிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT