சேலம்

மேட்டூா் அணை நீா் வரத்து 13 ஆயிரம் கனஅடியாக சரிவு

DIN

காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையைப் பொருத்து மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

கடந்த இரு நாள்களாக காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரியத் தொடங்கியது. வியாழக்கிழமை காலை நொடிக்கு 18,678 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து, வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 13,404 கனஅடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 22,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 116.24 அடியாகவும், நீா் இருப்பு 87.60 டி.எம்.சியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT