சேலம்

சேலம் மாவட்டத்தில்345 மி.மீ. மழை பதிவு

DIN

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை சுமாா் 345 மி.மீ. மழை பெய்துள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால், மலைப் பகுதிகளில் மழை நீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது. பாசனக் கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.): காடையம்பட்டி-46, ஏற்காடு-43, கரியகோவில்-38, வாழப்பாடி-30, மேட்டூா், பெத்தநாயக்கன்பாளையம்-24, ஆத்தூா்-23, ஆனைமடுவு-20, ஓமலூா்-19, கெங்கவல்லி-17, சேலம், வீரகனூா்-14, தம்மம்பட்டி-13, சங்ககிரி-13, எடப்பாடி-8 மி.மீ. என மொத்தம் 345 மி.மீ. மழை பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT