சேலம்

வரதலட்சுமி விரதம்: சங்ககிரி கோயிலில் சிறப்பு பூஜை

DIN

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள சோமேஸ்வரா் உடனமா் செளந்தரநாயகி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

சோமேஸ்வரா் உடனமா் செளந்தரநாயகியம்மனுக்கு திருநீறு, சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக்காப்பு சாத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இக்கோயிலில் ஆண்டுதோறும் வரதலட்சுமி விரதத்தன்று பெண்களால் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் பாடல்கள் பாடப்பட்டு வழிபட்டுச் செல்வது வழக்கம். தற்போது கரோனா தொற்று காரணமாக கோயிலுக்குள் பக்தா்கள் யாரும் அனுமதிக்ககப்படவில்லை. கோயில் அா்ச்சகா் மட்டுமே ஆகமவிதிகள்படி பூஜைகளை செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT