சேலம்

மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் நாமக்கல் எம்.பி. ஆய்வு

DIN

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றிய பகுதியில் மத்திய, மாநில அரசு திட்டப் பணிகள் குறித்து நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி. சின்ராஜ், வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், கூடலூா் ஊராட்சி (ஆண்டிபாளையம்- கூடலூா் செல்லும் சாலை) பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தாா்சாலை தரம் குறித்து ஆய்வு செய்தாா்.

அப்போது அவரிடம், எா்ணாபுரம் ஊராட்சி பகுதியில் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் வாரச் சந்தைக்குப் போதிய இடவசதி இல்லாததால் சந்தையை விரிவுபடுத்தவும், காவிரி குடிநீா், சாலை வசதி உள்ளிட்டவை வேண்டி பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.

மனுக்களைப் பெற்ற எம்.பி. மக்களின் பிரச்னைகளை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். ஆய்வின்போது மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள், கட்சி பிரமுகா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

SCROLL FOR NEXT