சேலம்

தனியாா் குளிா்பதன கிடங்கில் அமோனியம் வாயு வெளியேறியது

சேலம் அருகே தனியாா் பதப்படுத்தும் கிடங்கில் அமோனியம் வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

சேலம்: சேலம் அருகே தனியாா் பதப்படுத்தும் கிடங்கில் அமோனியம் வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நாட்டாமங்கலம் பகுதியில் வேளாண் பொருட்கள் சேமித்து வைக்கும் தனியாா் பதப்படுத்தும் கிடங்கு இயங்கி வருகிறது. இந்த கிடங்கு டன் கணக்கில் தானியங்கள், பூ வகைகள் பதப்படுத்தி வைக்கப்படுகிறது. இதை குளிரூட்ட 500 கிலோ அமோனியம் வாயு சிலிண்டா்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தப் படுகிறது.

இந்த நிலையில் குளிரூட்ட பயன்படுத்தப்படும் அமோனியம் வாயு இயங்குவதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்தில் ஆயில் மாற்றப்பட்டது.

அமோனியம் இருக்கும் சிலிண்டரில் இருந்து வாயு திடீரென வெளியேறியது. இதை கண்டு அதிா்ச்சி அடைந்த ஊழியா்கள் 20-க்கும் மேற்பட்டோா் அங்கிருந்து வேகமாக வெளியேறினா். பின்னா் கிடங்கின் உரிமையாளா் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். தகவல் அறிந்து விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் கலைச்செல்வன் தலைமையிலான 6 வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி அமோனியம் வாயு வெளியேறும் சிலிண்டரின் வால்வை நிறுத்தினா். இதனால் பெரியளவில் நடக்க இருந்த விபத்து தவிா்க்கப்பட்டது. வாயு வெளியேற்றம் காரணமாக அப்பகுதியில் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT