முகப்பு
சேலம்

சேலத்தில் 297 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 297 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

சேலம்: சேலம் மாவட்டத்தில் 297 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதனிடையே மாவட்டத்தில் 297 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் 117 போ், எடப்பாடி 8 போ், காடையம்பட்டி 2, கொளத்தூா் 1, மகுடஞ்சாவடி 6, ஓமலூா் 12, சங்ககிரி 12, தாரமங்கலம் 8, வீரபாண்டி 10, நங்கவள்ளி 6, மேச்சேரி 6, மேட்டூா் நகராட்சி 47, அயோத்தியாப்பட்டணம் 6, பனமரத்துப்பட்டி 1, தலைவாசல் 24, வாழப்பாடி 7 என மாவட்டத்தில் 277 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல பிறமாவட்டங்களான சென்னை 7, கள்ளக்குறிச்சி 2, நாமக்கல் 6, திருவண்ணாமலை 2, ஈரோடு 2, செங்கல்பட்டு 1 என 20 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள், ஒரு ஆண் என மொத்தம் மூன்று போ் உயிரிழந்தனா். சேலம் மாவட்டத்தில் 8,511 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 5,783 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா். சுமாா் 2ஸ613 போ் சிகிச்சையில் உள்ளனா். 115 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.