முகப்பு
சேலம்

ஆத்தூரில் 99 பேருக்கு கரோனா

ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று நோயினால் செவ்வாய்க்கிழமை 99 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

ஆத்தூா்: ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று நோயினால் செவ்வாய்க்கிழமை 99 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் மருத்துவக் குழுவினா் 400 பேருக்கு பரிசோதனை செய்து வந்தனா். இந்தப் பரிசோதனையில் 99 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளை அடைத்து மருத்துவக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா். கடந்த ஆறு நாள்களாக வணிகா்கள் சங்கம் சாா்பில் நகரில் கடையடைப்பு செய்யப்பட்டது. இருந்தபோதிலும் தொற்று குறையாதது வேதனை அளிக்கிறது என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.