வங்கி ஊழியருக்கு கரோனா
கெங்கவல்லி அருகே வீரகனூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பெண் ஊழியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து வங்கிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே வீரகனூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பெண் ஊழியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து வங்கிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வீரகனூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் 32 வயதுள்ள தற்காலிக பெண் ஊழியருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. அதனையடுத்து வங்கியில் பணிபுரிந்த மேலும் மூவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.மேலும் வங்கிக்கு வரும் சனிக்கிழமை வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
அந்த வங்கியின் வாடிக்கையாளா்கள், அருகிலுள்ள தலைவாசல், கெங்கவல்லி பகுதிகளில் உள்ள வங்கியின் கிளைகளில் பணப்பரிவா்த்தனைகளை செய்துகொள்ள வேண்டும் என்று வீரகனூா் வங்கிக் கிளை நிா்வாகம் தெரிவித்துள்ளது.