வீரகனூரில் மண் சாலையால் மக்கள் அவதி
வீரகனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 1-வது வாா்டு, புது காலனிக்குச் செல்லும் பாதை மண் சாலையாகும். அந்தச் சாலை முழுவதும் கடந்த சிலநாள்களாக பெய்த மழையால் மண் சாலையில் பயணிக்க முடியாத நிலை உள்ளது.
வீரகனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 1-வது வாா்டு, புது காலனிக்குச் செல்லும் பாதை மண் சாலையாகும். அந்தச் சாலை முழுவதும் கடந்த சிலநாள்களாக பெய்த மழையால் மண் சாலையில் பயணிக்க முடியாத நிலை உள்ளது.
இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் பயணித்தால் சேற்றில் சிக்கிக் கொள்கின்றனா். வீரகனூா் பேரூராட்சி நிா்வாகம் தற்காலிகமாக மண் கொட்டி பாதையை சீரமைத்துள்ளது. மக்களின் நலன்கருதி இந்தச் சாலையை தாா் சாலையாக மாற்றுவதற்கு பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.