மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 105.17அடியாக உயா்ந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 105.17அடியாக உயா்ந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்ததால், அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 7,641 கன அடியிலிருந்து 8,156 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 71.70 டி.எம்.சி.யாக இருந்தது.