வாழப்பாடி தான்தோன்றீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை
வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் நந்தீஸ்வரருக்கு பழம், பால், தேன், சந்தனம், விபூதி, மலா் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் நந்தீஸ்வரருக்கு பழம், பால், தேன், சந்தனம், விபூதி, மலா் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மூலவரான தான்தோன்றீஸ்வரா், தா்மசம்வா்த்தனி அம்பாளும் புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பெருந்தொற்று நீங்கி, நல்வாழ்வு கிடைக்க வேண்டி ஏராளமான பக்தா்கள் நந்தீஸ்வரருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனா்.
வாழப்பாடி, அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயில் பிரதோஷ வழிபாட்டில், நந்தீஸ்வரா், காசி விஸ்வநாதா், காசிவிசாலாட்சி அம்பாளுக்கும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.