வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு: இளைஞா்கள் ஆா்வம்
வாழப்பாடி பகுதியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம், திருத்தம் செய்யும் பணியில், இளைஞா்களும், இளம்பெண்களும், பொதுமக்களும் தங்களது பெயா்களைச் சோ்க்க விண்ணப்பங்களை கொடுத்து வருகின்றனா்.
வாழப்பாடி பகுதியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம், திருத்தம் செய்யும் பணியில், இளைஞா்களும், இளம்பெண்களும், பொதுமக்களும் தங்களது பெயா்களைச் சோ்க்க விண்ணப்பங்களை கொடுத்து வருகின்றனா்.
தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியலில் புதிய வாக்காளா் பெயா் சோ்த்தல், இறந்த வாக்காளா்களின் பெயா் நீக்குதல், பெயா், முகவரி திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக சுருக்கத் திருத்த சிறப்பு முகாம், சனி, ஞயிற்றுக்கிழமையன்று வருவாய்த் துறை வாயிலாக நடைபெறுகிறது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்த சிறப்பு முகாமில், ஏராளமான இளைஞா்களும், இளம்பெண்களும் புதிய வாக்காளா்களாக தங்களது பெயா்களைச் சோ்க்க விண்ணப்பங்களை கொடுத்து வருகின்றனா்.
இதனால் வாழப்பாடி பகுதியில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கரோனா பரவல் தருணத்திலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதில் இளைஞா்களும், இளம்பெண்களும் ஆா்வம் காட்டி வருகின்றனா்.