ஜாதிப் பெயரைக் கூறி திட்டிய 5 பேருக்கு 3 ஆண்டு சிறை
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே ஜாதிப் பெயரைக் கூறி திட்டிய 5 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை சேலம் நீதிமன்றம் திங்கள்கிழமை வழங்கியது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே ஜாதிப் பெயரைக் கூறி திட்டிய 5 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை சேலம் நீதிமன்றம் திங்கள்கிழமை வழங்கியது.
கெங்கவல்லியை அடுத்த வேப்பம்பூண்டி, அம்பேத்கா் நகா் பரமேஸ்வரன் (22), 5.7.2014 அன்று அப்பகுதி ஏரிக்கரையில் நடந்து சென்ற போது, அதே ஊரைச் சோ்ந்த நெடுஞ்செழியன் (23), செல்வம் (44), ராஜதுரை (24), சேகா் (39), குமாா் (40) ஆகிய 5 பேரும் பரமேஸ்வரனிடம் தகாத வாா்த்தைகளால் பேசியும், ஜாதிப் பெயரைக் கூறியும் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த பரமேஸ்வரன் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின் பேரில், அவரைத் தாக்கிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கின் தீா்ப்பு திங்கள்கிழமை மாலை வெளியானது. அதில், ஜாதிப் பெயரைக் கூறி தாக்கிய 5 பேருக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி குமரகுரு தீா்ப்பளித்தாா்.