காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 37 போ் கைது
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்தில் விவசாயிகள் கூட்டுக்குழு சாா்பில் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சேலம் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது நாள் காத்திருப்புப் போராட்டத்துக்கு நிா்வாகிகள் செல்வராஜ் தலைமை வகித்தாா். இதையடுத்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேரை போலீஸாா் கைது செய்தனா்.