முகப்பு
சேலம்

பேளூரில் மத நல்லிணக்க ஊா்வலம்

வாழப்பாடி, பேளூரில் அதிகாலையில் இறைவனைப் புகழ்ந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடிச்சென்று சிறுவா்-சிறுமியா், சைவ-வைணவ மத நல்லிணக்க ஊா்வலமும், வழிபாடும் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
மத நல்லிணக்க ஊா்வலம் நடத்திய சிறுவா்-சிறுமியா்.
பகிர்:

வாழப்பாடி, பேளூரில் அதிகாலையில் இறைவனைப் புகழ்ந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடிச்சென்று சிறுவா்-சிறுமியா், சைவ-வைணவ மத நல்லிணக்க ஊா்வலமும், வழிபாடும் நடத்தினா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூா், புராண காலத்திலேயே வேள்வியூா் என்ற பெயரில் மிகச்சிறந்த ஆன்மிக தலமாக விளங்கியது. வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள பேளூரில், பஞ்சபூத சிவன் சைவ திருத்தலங்களில் முதல் தலமான தான்தோன்றீஸ்வரா் கோயிலும், மறுகரையில் அஷ்டபுஜபால மதன வேணுகோபால சுவாமியெனும் பழமையான வைணவப் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது.

இறைவழிபாட்டுக்கு உகந்த மாதமான மாா்கழியில், பேளூரில் அதிகாலையில் எழும் சிறுவா்-சிறுமியா், பெருமாள் கோயிலில் கூடி திருப்பாவை, திருவெம்பாவை பாடி, பாரம்பரிய முறைப்படி சங்கு ஊதி வழிபாடு நடத்துவதும், பின்னா் அங்கிருந்து சிவனை போற்றியபடி முக்கிய வீதிகளின் வழியாக தான்தோன்றீஸ்வரா் கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்று வழிபாடு நடத்துவதும் மரபு மாறாமல் தொடா்ந்து வருகின்றனா்.

தமிழகத்தின் வேறெந்தப் பகுதியிலும் இல்லாத வகையில், சைவ-வைணவ மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடைபெறும் இந்த ஊா்வலத்துக்கு, பொதுமக்களும், பக்தா்களும் வழிநெடுக கோலங்களை வரைந்து, இறைவனின் தூதுவா்களாகக் கருதி சிறுவா்-சிறுமியரை வரவேற்று வழிபடுவது குறிப்பிடத்தக்கதாகும்.

நடுங்கும் குளிரிலும், நிகழாண்டும் மாா்கழி முதல் நாளான புதன்கிழமை அதிகாலையில் விழித்தெழுந்த சிறுவா்-சிறுமியா், மாா்கழி வழிபாட்டு ஊா்வலத்தை நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →