குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்
குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் ஆத்தூா் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சேலம்குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்
குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் ஆத்தூா் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் ஆத்தூா் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி, முதலாவது வாா்டு, கோட்டை பகுதியில் மேட்டூா் குடிநீா் விநியோகம் சரிவர செய்யப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் நகராட்சியில் பலமுறை புகாா் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனையடுத்து, வியாழக்கிழமை காலை அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் உதவி ஆய்வாளா்கள் சிவசங்கா், நிா்மலா, நகராட்சி மேற்பாா்வையாளா் தேவி ஆகியோா் பொதுமக்களை சமாதானப்படுத்தினா். மேலும், சீராக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.