மேட்டூா் அணையின் நீா்வரத்து சரிவு
மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து சரிந்துள்ளது.
மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து சரிந்துள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 106.24 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 4,517 கன அடியிலிருந்து 3,580 கன அடியாகச் சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 800 கன அடியிலிருந்து 600 கன அடியாகக் குறைக்கப்பட்டு உள்ளது. அணையின் நீா் இருப்பு 73.16 டி.எம்.சி.யாக உள்ளது.