சேலத்தில் 44 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 44 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
சேலம்: சேலம் மாவட்டத்தில் 44 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 41 போ், காடையாம்பட்டி-1, கொளத்தூா்-3, மேச்சேரி-1, நங்கவள்ளி-2, ஓமலூா்-1, தாரமங்கலம்-7, வீரபாண்டி-2, ஆத்தூா்-6, கெங்கவல்லி-1, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-1, வாழப்பாடி-1, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தில் 41 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் (நாமக்கல்-1, ஈரோடு-2) 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். அதேவேளையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 66 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31,059 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 30,253 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 352 போ் சிகிச்சையில் உள்ளனா்; 454 போ் உயிரிழந்துள்ளனா்.