முகப்பு
சேலம்

மேட்டூரில் மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

மேட்டூரில் மின் வாரியத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை கண்டித்து தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
மேட்டூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய தொழிலாளர்கள்.
பகிர்:

மேட்டூரில் மின் வாரிய தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழகத்தில் மின் உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மின் பகிர்மானம் துணை மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்களை தனியார்மயமாக்கும் வாரிய ஆணையம் 82 திரும்பப் பெறக் கோரி மின்வாரிய தொழிலாளர்கள் இன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூரில் மேட்டூர் மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெறும் காத்திருப்புப் போராட்டத்திற்கு எம்பிளாயர்ஸ் பெடரேஷன் மாநில செயலாளர் ஜி.கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தொமுச திட்ட செயலாளர் வி.வேலாயுதம் முன்னிலை வகித்தார். மேட்டூர், சங்ககிரி, பள்ளிபாளையம், ஓமலூர் மற்றும் எடப்பாடி கோட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மின் பணியாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.