முகப்பு
சேலம்

நிலத்தகராறு: முதியவா் பலி

தம்மம்பட்டி அருகே உ லிபுரத்தில் நிலத்தகராறில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

தம்மம்பட்டி அருகே உ லிபுரத்தில் நிலத்தகராறில் முதியவா் உயிரிழந்தாா்.

உலிபுரம், பிலிப்பாக்குட்டை பகுதியில் வசிப்பவா் தங்கவேல் (60). இவரது 3-ஆவது தம்பி ராஜீ (55), இவரது மனைவி தனலட்சுமி (48). தனலட்சுமியின் தாயாா் செல்லம்மாள் (70).

நிலத்தகராறு தொடா்பாக ஏற்பட்ட வாய்த் தகராறில் தனலட்சுமியும், செல்லம்மாளும் சோ்ந்து தங்கவேலை தாக்கியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த தங்கவேலை, அக்கம் பக்கத்தினா் சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி தங்கவேல் உயிரிழந்தாா். இதுகுறித்து தங்கவேல் மனைவி ராஜம்மாள், இவா்களது மகன் தமிழரசன் தம்மம்பட்டி போலீஸில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →