முகப்பு
சேலம்

சேலம் கோட்டை  ஸ்ரீ அழகிரி நாத சாமி ஆலயத்தில் சொர்க்க வாசல் திறப்பு: வருகிற 4ம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்திருக்கும்

சேலத்தில் உள்ள ஸ்ரீ அழகிரி நாத சுவாமி ஆலயத்தில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சேலம் டவுன் கோட்டை பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ அழகிரிநாதர் சாமி ஆலயம் உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
வைகுண்ட ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வழியாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அழகிரிநாதர் பெருமாள்.
பகிர்:

சேலத்தில் உள்ள ஸ்ரீ அழகிரி நாத சுவாமி ஆலயத்தில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சேலம் டவுன் கோட்டை பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ அழகிரிநாதர் சாமி ஆலயம் உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் முக கவசம் அணிந்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே கோவிலில் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.  இந்த நிலையில் இன்று அதிகாலை 4.45 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவையொட்டி அதிகாலை 3 மணியிலிருந்து திருப்பாவை படிக்கப்பட்டது .

பின்னர் சாமிக்கு சுதர்சன பட்டாச்சாரியார் சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் சரியாக 4.45 மணியளவில் சாமி சொர்க்கவாசல் வழியே எடுத்து வரப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாமியை வணங்கி கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு வணங்கினர்.

 பின்னர் சாமி கோவிலுக்குள் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் பக்தர்கள் சாமி வணங்க அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று காரணத்தால் சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆன் லைன் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதி தரப்பட்டு இருந்தது. சுமார் பத்தாயிரம் பேர் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர்.

இங்கு காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை சாமியை தரிசிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர் . ஒரு மணி நேரத்திற்கு 1500 பக்தர்கள் மட்டுமே கோவில்கள் செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது.
 ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 750 பெரும், இலவச தரிசனத்தில் 750 பெரும் செல்ல அனுமதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இன்று திறக்கப்பட்ட சொர்க்க வாசல் வரும் 4ஆம் தேதி வரை திறந்திருக்கும். நாளை முதல் பக்தர்கள் வழக்கம்போல கோவிலுக்கு வந்து சாமியை வணங்கி செல்லலாம். இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த பக்தர்கள் பெரும்பாலானோர் முக கவசம் அணிந்து இருந்தனர்.

 சொர்க்கவாசல் திறப்பு ஏற்பாடுகளை சேலம் கோட்டை அழகிரிநாதர் சாமி கோவில் செயல் அலுவலர் குமரவேலு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →