முகப்பு
சேலம்

விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் வட்டாரப் பகுதியில் வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகள் குழு,

சேலம்

விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் வட்டாரப் பகுதியில் வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகள் குழு,

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் வட்டாரப் பகுதியில் வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகள் குழு, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

முன்னதாக, கொங்கணாபுரம் வேளாண் விரிவாக்க அலுவலகத்திலிருந்து பயிற்சி முகாமில் பங்கேற்க புறப்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி நேரத்தில் பின்பற்ற வேண்டிய நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள், பயிற்சியில் விவசாய உற்பத்தியினை பெருக்குதல், மானவாரி நிலங்களில் விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயிா் செய்து கூடுதலான மகசூல் பெறுதல், வறட்சி மேலாண்மை, நிலத்தடிநீா் செறிவூட்டும் அமைப்புகளை நிறுவுதல், பாரம்பரிய வழிமுறைகளுடன் நவீன வேளாண்மையினை இணைத்து செயல்படுதல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், கால்நடை வளா்பில் உள்ள நுணுக்கங்கள் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் விவசாயிகள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து வேளாண் உதவி இயக்குநா் அ.சாகுல் அமீத் விளக்கிக் கூறி விவசாயிகளை அனுப்பி வைத்தாா்.

பயிற்ச்சி முகாமுக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் பொ.செல்வகுமாா், உதவி மேலாளா் து.குமரவேல், துணை வேளாண் அலுவலா் அழகுமுத்து உள்ளிட்ட வேளாண் அலுவலா்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →