முகப்பு
சேலம்

எடப்பாடி அருகே குடியிருப்புப் பகுதியில் வீசப்பட்ட மின்சாதனப்பொருட்கள்

எடப்பாடி அருகே குடியிருப்புப்பகுதியில், இரவு நேரத்தில் வீசப்பட்ட மின்சாதனப்பொருட்களால் அப்பகுதி மக்கள் அச்சம்மடைந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
குடியிருப்புப் பகுதியில் வீசப்பட்டமின்சாதனப்பொருட்கள்
பகிர்:

எடப்பாடி அருகே குடியிருப்புப்பகுதியில், இரவு நேரத்தில் வீசப்பட்ட மின்சாதனப்பொருட்களால் அப்பகுதி மக்கள் அச்சம்மடைந்துள்ளனர்.

எடப்பாடி நகராட்சிப்பகுதியில், தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் ஏ, பி, சி என பல்வேறு வகையிலான 300க்கும் மேற்பட்ட 
வீடுகளில், அதன் உரிமையாளர்கள் குடியிருந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் விரிவாக்கம் செய்யும் வகையில், ஏற்கனவே உள்ள குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில், புதிதாக 500க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளை அமைத்திடும் பணியானது, வீட்டுவசதி வாரியஅலுவலர்கள் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் அருகில், ஆயிரக்கண்கான மின் விளக்குள், மற்றும் மின்சாதனப் பொருட்களை மர்ம நபர்கள் வீசிசென்றுள்ளனர். திடீரென வீசப்பட்ட மின் சாதனப்பொருட்களால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் அவற்றுள் சில மின் விளக்குகள் நல்ல நிலையில், இருப்பதாக செய்தி பரவவே, சுற்றுப்பகுதி மக்கள் அந்த மின்சாதனப்பொருட்களை தங்கள் வீடுகளுக்கு அள்ளிச்சென்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கரோனா நோய்த்தொற்று உள்ள நிலையில், இப்பகுதியில் வீசப்பட்ட மின்சாதனப்பொருட்கள், இப்பகுதி வாசிகளிடம் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் நிறைந்த இப்பகுதியில் கொட்டப்பட்ட மின்கழிவுகளால், இப்பகுதி மக்களுக்கும், கால்நடைகளுக்கும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், இக்கழிவுகள் அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவி, மாசினை ஏற்படுத்த வாய்புள்ளதாகவும், அனுமதி இன்றி குடியிருப்பு பகுதியில் மின்சாதன கழிவுகளை கொட்டிய நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள மின் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.