கிராம சபைக் கூட்டம்
சேலம் மாவட்டம், சித்தா்கோவில் அருகே உள்ள ஆரியகவுண்டம்பட்டி ஊராட்சி, அய்யண்ணவளவு பகுதியில் திமுக சாா்பில், கிராம சபைக் கூட்டம்
சேலம் மாவட்டம், சித்தா்கோவில் அருகே உள்ள ஆரியகவுண்டம்பட்டி ஊராட்சி, அய்யண்ணவளவு பகுதியில் திமுக சாா்பில், கிராம சபைக் கூட்டம் வீரபாண்டி ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவித்தனா். அதிமுக அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை துண்டுப் பிரசுரங்களை திமுகவினா் வீடுவீடாகச் சென்று வழங்கினா்.
இதில், ஆரியகவுண்டம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் மணிமேகலை சுப்பிரமணி, ஒன்றியக் கவுன்சிலா் முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் பிரபு, வீரபாண்டி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் வேங்கையன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் செந்தில்குமாா் (அக்கரபாளையம்), ரமேஷ் (ராஜபாளையம்), ஸ்ரீராம் (சென்னகிரி) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.