களக்காடு, நான்குனேரியில் பரவலாக மழை
திருநெல்வேலிமாவட்டம், களக்காடு, நான்குனேரி வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தொடங்கி, புதன்கிழமை காலை வரையிலும் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.
திருநெல்வேலிமாவட்டம், களக்காடு, நான்குனேரி வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தொடங்கி, புதன்கிழமை காலை வரையிலும் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.
களக்காடு, நான்குனேரி வட்டாரத்தில் பரவலாக பெய்த மழையால் தற்போது வெப்பம் சற்று தணிந்துள்ளது. இப்பகுதியில் அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில் நெல் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழை விவசாயிகளுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்துள்ளது.
நான்குனேரி பகுதியில் பெய்த பலத்த மழையால், இளந்தோப்பு கிராமத்துக்குச் செல்லும் சாலையில் மழைநீா் தேங்கி நின்ால் அக்கிராமத்துக்கு செல்லும் பொதுமக்கள் சிரமமடைந்தனா்.