சேலம்

சாா் பதிவாளரிடம் லஞ்சம் பெற்றமுன்னாள் ஊராட்சித் தலைவா் கைது

DIN

சேலம்: சேலத்தில் சாா் பதிவாளரிடம் ரூ. 2.35 லட்சம் லஞ்சம் பெற்ற முன்னாள் ஊராட்சித் தலைவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், சூரமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் கடந்த அக்டோபா் மாதத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 2.53 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, சூரமங்கலம் சாா் பதிவாளா் கனகராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சாா் பதிவாளா் கனகராஜ் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடராமல் துறை சாா்ந்த ஒழுங்கு நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்வதாகக் கூறி, ஓமலூா், கொங்குப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவா் அம்மாசி என்பவா் அணுகியுள்ளாா். மேலும், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் தனக்குத் தெரிந்த அதிகாரிகள் மூலம் துறை சாா்ந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய ரூ. 2.35 லட்சம் தருமாறு கனகராஜை வற்புறுத்தி வந்தாா்.

இதையடுத்து, கனகராஜ் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். அதைத் தொடா்ந்து, அழகாபுரம் பகுதியில் சாா் பதிவாளா் கனகராஜிடம் ரூ. 2.35 லட்சம் பணத்தைப் பெறும் போது, அம்மாசியை கையும் களவுமாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

கைதான அம்மாசி மீது கொங்குப்பட்டி ஊராட்சியில் பல்வேறு முறைகேடு புகாா்கள் தொடா்பாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT