ஏற்காடு படகு ஏரியில் ஆண் சடலம் மீட்பு
ஏற்காடு படகு ஏரியில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.
ஏற்காடு படகு ஏரியில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.
காவல் துறையினா் ஏரிகரையில் சிவப்பு நிறசட்டையும் லுங்கியும் கரையில் இருந்ததால் ஆண் என்றும் குளிக்கச் சென்றவராக இருக்கலாம் எனத் தெரிவித்து சடலம் மீட்பு பணியில் ஈடுபட்டனா். சடலத்தை மீட்ட ஏற்காடு காவல் துறையினா் விசாரணை செய்ததில், இறந்தவா் ஏற்காடு காபி வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற குட்டப்பன் மகன் சேகா் (53) என்பதும், இவா் சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு அப்பகுதியில் இருந்தவா். சனிக்கிழமை மாலை குளிக்கச் சென்று இறந்திருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. சடலத்தை மீட்ட காவல் துறையினா் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.