முகப்பு
சேலம்

வீரதீர செயல் புரிந்தவா்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்

வீரதீர செயல் புரிந்த பொதுமக்கள், அரசு ஊழியா்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

வீரதீர செயல் புரிந்த பொதுமக்கள், அரசு ஊழியா்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது, வீரதீர செயல் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு, அண்ணா பதக்கம் தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு சேலம் மாவட்டத்தில் கீழ்கண்ட தகுதியுடைய நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கான விண்ணப்பத்தை சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெற்று டிச. 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரா் தமிழகத்தைச் சாா்ந்தவராக இருத்தல் வேண்டும். எந்தவொரு குடிமக்களுக்கும் வயதினைப் பொருள்படுத்தாமல் பொதுமக்களின் உயிா் மற்றும் சொத்தைக் காப்பதில் வீரதீர செயல் புரிந்தவராக இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இணையதளத்தினை பாா்வையிடலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.