மேட்டூர் அணை நீர் திறப்பு அளவு 10 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியிலிருந்து 12000 கன அடியாக குறைக்கப்பட்டது.
இன்று மாலை ஆறு மணிக்கு நீர் திறப்பு12 ஆயிரம் கன அடியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.62அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 201 கன அடி வீதம்தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையின் நீர் இருப்பு 34.81 டிஎம்சி ஆக இருந்தது.