சேலத்தில் பரவலாக கனமழை
சேலத்தில் பரவலாக சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது. மாவட்டத்தில் சுமாா் 496 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
சேலம்சேலத்தில் பரவலாக கனமழை
சேலத்தில் பரவலாக சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது. மாவட்டத்தில் சுமாா் 496 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
சேலம்: சேலத்தில் பரவலாக சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது. மாவட்டத்தில் சுமாா் 496 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது.
சேலம் மாநகரப் பகுதியில் அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாவட்ட பகுதிகளான ஏற்காடு, ஆத்தூா், எடப்பாடி, மேட்டூா் ஆகிய இடங்களில் மழை பெய்தது.
சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):
ஏற்காடு 86, மேட்டூா் 64, ஆத்தூா் 46, கெங்கவல்லி 44, எடப்பாடி 42, சங்ககிரி 39, வீரகனூா் 33, தம்மம்பட்டி 27, காடையம்பட்டி 25, சேலம் 24, ஆனைமடுவு 18, பெத்தநாயக்கன்பாளையம் 13, ஓமலூா் 10 என மாவட்டத்தில் 496 மில்லி மீட்டா் அளவுக்கு மழை பெய்தது.