முகப்பு
சேலம்

சேலம் மாவட்டத்தில் 68 நாள்களுக்கு பிறகு 397 பேருந்துகள் இயக்கம்

சேலம் மாவட்டத்தில் 68 நாள்களுக்கு பிறகு 397 பேருந்துகள் உரிய பாதுகாப்புடன்  மண்டலம் முழுவதும் இயக்கப்படுகிறது. போதிய பயணிகள் இல்லாத காரணத்தினால் பேருந்துகள் காலதாமதமாக செல்கிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 68 நாள்களுக்கு பிறகு 397 பேருந்துகள் உரிய பாதுகாப்புடன்  மண்டலம் முழுவதும் இயக்கப்படுகிறது. போதிய பயணிகள் இல்லாத காரணத்தினால் பேருந்துகள் காலதாமதமாக செல்கிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் உத்தரவு அமலில் உள்ள நிலையில் கடந்த 68 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த பேருந்து போக்குவரத்து திங்கள்கிழமை முதல்  8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 6 மண்டலங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் சேலம் மண்டலத்திலிருந்து நாமக்கல், கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளுக்கு 397 பேருந்துகள் இயக்கப் படுகின்றன. மாநகர பேருந்துகள் 262 புறநகர் 135 பேருந்துகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு அரசு அறிவித்த விதிமுறைகளின்படி கிருமிநாசினிகள் கொண்டு கைகளை சுத்தப் படுத்திக் கொண்டும் முக கவசம் அணிந்து கொண்டால் மட்டுமே பேருந்துகளில் அனுமதிக்கப்படுகின்றன. மேலும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கைகளில் கையுறைகள் மற்றும் முக கவசம் அணிந்து பேருந்தை இயக்கி வருகின்றனர். 

52 இருக்கைகள் கொண்ட பேருந்துகளில் 31  பயணிகள் மட்டுமே  பயணிக்கவும், பேருந்தில் நின்றவாறு பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை. மூன்று பேர் கொண்ட இருக்கையில் இரண்டு நபர்களும், இரண்டு நபர்கள் இருக்கையில் ஒரு நபர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகின்றனர். முதல் நாள் என்பதால் குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே சேலம் மத்திய பேருந்து நிலையத்திற்கு வருகை புரிந்தனர். சேலம் பழைய பேருந்து நிலையம் மற்றும்  மத்திய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த தற்காலிக சந்தைகள் பேருந்துகள் இயக்கப்படுவதால் அருகே உள்ள காலி இடங்களுக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்  என்பதை வலியுறுத்தும் விதமாக ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்து வருகின்றனர். மேலும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் போதிய பயணிகள் இல்லாத காரணத்தினால் பேருந்துகள் காலதாமதமாக செல்கிறது.

பயணிகள் கூறுகையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு பேருந்து சேவை நடைபெறுகிறது வரவேற்கிறோம். இந்த சேவை நிறுத்தப்படாமல் இன்னும் அதிகளவில் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க வேண்டும். தற்போது அதிகளவில் நோய்த்தொற்று பரவி வருவதால் மீண்டும் பேருந்து போக்குவரத்தை நிறுத்தப்படாமல் தொடர்ந்து அரசு உரிய பாதுகாப்புடன் இயக்க வேண்டும் என தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →