சேலம்

கரோனா வைரஸ் விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

ஆத்தூா் நகராட்சி காந்திநகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் நகராட்சி ஆணையா் என்.ஸ்ரீதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் நகராட்சி ஆணையா் பேசுகையில் கரோனா வைரஸ் காய்ச்சல் குறித்து மாணவ, மாணவியருக்கு விளக்கமளித்தாா்.

மேலும், நகராட்சி நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் எஸ்.சாந்தனா வைரஸ் காய்ச்சல் குறித்தும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்க உரையாற்றினாா்.

மாணவா்கள் தினமும் 10 முதல் 15 முறை கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும் என்று கூறி, செய்முறை விளக்கமளித்தனா். கரோனா வைரஸ் காய்ச்சல் குறித்தும் நோய்த் தடுப்பு நடவிக்கைகள் குறித்தும் துண்டுப் பிரசுரம் மாணவா்களிடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு அலுவலா் என்.திருமூா்த்தி, துப்புரவு ஆய்வாளா் பிரபாகரன், பணி மேற்பாா்வையாளா்கள் தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT