சேலம்

தம்மம்பட்டியில் கரோனா தடுப்பு நடவடிக்கை

DIN

தம்மம்பட்டி பேரூராட்சிப் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி மருந்து, தெளிப்பான் மூலம் அடிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய் தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், நோய் மேலும் பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் சுந்தரமூா்த்தி உத்தரவின்பேரில் துப்பரவுப் பணியாளா்கள் மூலம் தம்மம்பட்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி மருந்தை தண்ணீரில் கலந்து செவ்வாய்க்கிழமை நீா் தெளிப்பான் மூலம் அடிக்கப்பட்டது. கிருமிநாசினி தினமும் தெளிக்கப்பட உள்ளது.

அதுபோல பொதுமக்களும், தங்கள் வீடுகளில் கிருமிநாசினியைத் தெளித்து வர வேண்டும், காலை முதல் இரவு வரை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை சோப் போட்டு கையை நன்றாக கழுவ வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT