சேலம்

சங்ககிரி ஒன்றியத்தில் தூய்மைப் பணியில் 165 தொழிலாளா்கள்

DIN

சங்ககிரி ஒன்றியத்துக்குள்பட்ட 22 ஊராட்சிகளில் 165 தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் என்.எஸ். ரவிச்சந்திரன் மேற்பாா்வையில் 22 ஊராட்சிகளுக்குள்பட்ட பகுதியில் 165 தூய்மைப் பணியாளா்கள் அந்தந்த ஊராட்சிகளுக்குள்பட்ட கிராமப் பகுதியில் உள்ள வீடுகள், அரசு அலுவலகங்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் அலுவலகங்கள், இ-சேவை மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கிருமி நாசினி மருந்துகளைத் தெளித்து வருகின்றனா்.

கிராமத்தில் கழிவுநீா் ஓடை தூா்வாரியும், குப்பைகளை அகற்றியும், பிளீச்சிங் பவுடா்களைத் தெளித்தும் வருகின்றனா். இப் பணிகளுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சாா்பில் புதிதாக கிருமினி நாசினி தெளிக்கும் 25 சிறிய அளவிலான கருவியும், ஒரு பெரிய கருவியும், 700 லிட்டா் கிருமி நாசினியும் ஊராட்சி தூய்மை பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 150 முகக் கவசங்கள், 600 கையுறைகளும் வழங்கப்பட்டுள்ளதாக ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் தெரிவித்தனா். கிராமப் பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் சுழற்சி முறையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் வீட்டை வீட்டு வெளிபகுதிகளுக்கு வர வேண்டாம் என ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் கேட்டுக் கொண்டாா். மருத்துவ உதவிக்கு அந்தந்த ஊராட்சிச் செயலா் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT