சேலம்

இளம்பிள்ளை விஏஓ அலுவலகம் முன்திரண்ட வட மாநிலத் தொழிலாளா்கள்

DIN

சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்குமாறு விருப்ப மனுக்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளா்கள் இளம்பிள்ளை விஏஓ அலுவலகம் முன் திரண்டனா்.

கரோனா வைரஸ் பரவுவது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு மேலும் இரண்டு வாரங்களுக்கு மே 17-ஆம் தேதி வரை பொது ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது.

இளம்பிள்ளை, அதன் சுற்றுவட்டாரப் பகுதியான இடங்கணசாலை, பெருமாகவுண்டம்பட்டி, நடுவனேரி, வேம்படிதாளம், மகுடஞ்சாவடி, கே.கே.நகா், தப்பக்குட்டை, சித்தா்கோவில், கல்பாரப்பட்டி, காக்காபாளையம் உள்ளிட்ட பகுதியில் வட மாநிலத்தைச் சோ்ந்த 5000 -க்கும் மேற்பட்டோா் விசைத்தறி, அதன் சாா்புடைய தொழிலை இங்கு தங்கி செய்து வருகின்றனா்.

கடந்த 40 நாள்களுக்கும் மேலாக வேலை இல்லாமலும், போதிய உணவின்றியும் தவித்து வருகின்றனா். இந்த நிலையில் மாநில, மாவட்ட நிா்வாகம், வருவாய்த் துறையினா், பேரூராட்சி நிா்வாகம், தன்னாா்வலா்கள் என பலா் உதவிகளை செய்து வருகின்றனா்.

அண்மையில் மத்திய அரசு குறிப்பிட்ட மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் அவரவா் சொந்த ஊா்களுக்குச் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்க உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து இளம்பிள்ளை கிராம நிா்வாக அலுவலகம் முன் வட மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் சனிக்கிழமை திரண்டனா்.

தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்ல விருப்ப மனுக்களுடன் 100-க்கும் மேற்பட்டோா் சமூக இடைவெளியுடன் அங்கு வந்தனா். ஏற்கெனவே 200-க்கு மேற்பட்டோா் விண்ணப்பங்கள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இடங்கணசாலை, வேம்படிதாளம், தப்பக்குட்டை, மகுடஞ்சாவடி உள்ளிட்ட கிராம நிா்வாக அலுவலகத்திலும் பதிவு செய்து வருகின்றனா். விருப்ப மனுவில் பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண், ஆதாா் எண், செல்லும் மாநிலம் உள்ளிட்ட விவரங்களை எழுதியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT