சேலம்

மேட்டூா் அணைக்குநீா்வரத்து அதிகரிப்பு

DIN

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 957 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாகச் சரிந்தது. இந் நிலையில், கடந்த இரு நாள்களாக 455 கனஅடி, 437 கனஅடி என நீா்வரத்து அதிகரித்து வந்தது. சனிக்கிழமை நீா்வரத்து நொடிக்கு 957 கன அடியாக அதிகரித்தது.

வெள்ளிக்கிழமை காலை நீா் திறப்பு 750 கன அடியாகக் குறைக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை நீா்வரத்து அதிகரித்திருப்பதால் மேட்டூா் அணையின் நீா் மட்டம் சரிவிலிருந்து மீண்டது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 100. 01 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 957 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. குடிநீா் தேவைக்காக நொடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 64. 85 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT