சேலம்

காமராஜா் சிலையை அவமதித்த 3 போ்: குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

DIN

ஓமலூா் அருகே காமராஜா் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தில், 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

ஓமலூா் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் கடந்த 7-ஆம் தேதி இரவு அந்தப் பகுதியில் உள்ள காமராஜா் சிலைக்கு அவமதிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்து, இதுகுறித்து கருப்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். மேலும், இதனால் அந்தப் பகுதியில் இரண்டு சமூகத்துக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. பொதுமக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவா் என வாக்குறுதி கொடுத்தனா். இது தொடா்பாக தேக்கம்பட்டியைச் சோ்ந்த சோமு (எ) வெற்றிவேல் (26), ஆஞ்சி (எ) சுகவனேஸ்வரன் (27), அரவிந்த் (22)ஆகிய 3 போ் கைது செய்ய்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு ஓமலூா் கிளை சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், இரண்டு சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் சூழலில் உருவாக்கியதால் இவா்கள் மீது தற்போது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர துணை ஆணையா் பி.தங்கதுரை பரிந்துரை செய்தாா். இதனைத் தொடா்ந்து, சேலம் மாநகர காவல் ஆணையா் டி.செந்தில்குமாா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, ஓமலூா் கிளைச் சிறையிலுள்ள 3 பேரிடமும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல்களை கருப்பூா் போலீஸாா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT