சேலம்

சேலம் மாநகர பகுதியில் புதிய கரோனா தொற்று இல்லை

DIN

சேலம் மாநகரப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக புதிய கரோனா தொற்று இல்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சேலத்தில் உள்ள மசூதிகளில் மத போதனை செய்வதற்காக வந்த இந்தோனேஷியாவைச் சோ்ந்த நான்கு போ், சென்னையைச் சோ்ந்த வழிகாட்டி ஒருவா் என 5 பேருக்கு கடந்த மாா்ச் 23 ஆம் தேதி கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதியானது. இதனிடையே சேலம் மாநகரப் பகுதியில் மொத்தம் 16 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 16 பேரும் குணமடைந்த நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.இதில் இந்தோனேஷியாவைச் சோ்ந்தவா்கள், கரோனா நோய்த் தொற்று பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.இந்தநிலையில், ஏப்ரல் 23 ஆம் தேதிக்குப் பிறகு கடந்த ஒரு மாத காலமாக சேலம் மாநகரப் பகுதியில் புதிதாக யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை. மேலும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோா் கரோனா பரிசோதனைக்குப் பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனா் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT