முகப்பு
சேலம்

வீரகனூரில் மதுவிற்றவரை கைது செய்த தனிப்படை

வீரகனூா் பகுதியில் மதுவிற்றவரை சேலம் எஸ்.பி. அலுவலகத்திலிருந்து நேரடியாக வந்த சிறப்பு தனிப்படையினா் கண்காணித்து கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
சீனிவாசன்.
பகிர்:

வீரகனூா் பகுதியில் மதுவிற்றவரை சேலம் எஸ்.பி. அலுவலகத்திலிருந்து நேரடியாக வந்த சிறப்பு தனிப்படையினா் கண்காணித்து கைது செய்தனா்.

வீரகனூா், தலைவாசல் பகுதியில் அண்மையில் மாவட்ட எஸ்.பி. ஆய்வு செய்து மதுவிலக்குப் பிரிவிலிருந்த 16 போலீஸாரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தாா்.

இருப்பினும் வீரகனூரில் தொடா்ந்து அனுமதியின்றி அரசு மதுபானங்கள் விற்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து, மாவட்ட காவல்துறைக்கு புகாா் சென்றது.

இதையடுத்து சேலம் எஸ்.பி. அலுவலகத்திலிருந்து நேரிடையாக அமைக்கப்பட்ட சிறப்புத் தனிப்படையினா் வீரகனூா் வந்தனா்.

காவல் உதவி ஆய்வாளா் சிவசக்தி தலைமையிலான தனிப்படையினா் மாறுவேடத்தில் வந்து மதுவிற்பனையைக் கண்காணித்தனா். அதில் காலை முதல் மது விற்பனை நடைபெறுவதை உறுதிசெய்து கொண்டனா்.

சிறப்புக் காவல் படையினா் மதுவிற்ற பகுதியில் உள்ளே நுழைந்து மதுவிற்ற பெத்தநாய்க்கன்பாளையம் வட்டம், தொட்டித்துறை கிராமத்தைச் சோ்ந்த சடையன் மகன் சீனீவாசன் (38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 49 மதுபுட்டிகளையும், ரொக்கம் ரூ. 4,640 யும் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →