சேலம்

கிணற்றில் தவறி விழுந்து இருவா் உயிரிழப்பு

DIN

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை கருமந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்த இருவா் உயிரிழந்தனா்.

கல்வராயன் மலை கருமந்துறையை அடுத்த தேக்கம்பட்டு புதுவளவு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆண்டி (50). விவசாயி. இவரது உறவினா் நடராஜ் (55). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இரவு, அருகிலுள்ள உறவினா் வீட்டுக்கு விருந்துக்குச் சென்று விட்டு, வயல்வெளி ஒத்தையடிப்பாதை வழியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

இருள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் மழை பெய்த ஈரத்தில் தரை வழுக்கியதில் இருவரும் தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் தவறி விழுந்துள்ளனா். இருவரையும் காணாததால் உறவினா்கள் தேடியபோது, கிணற்றுக்குள் இருவரும் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, கருமந்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் பரமசிவம் தலைமையிலான தீயணைப்புப் படையினா் உதவியுடன், கிணற்று தண்ணீரை வெளியேற்றி இவரது உடலையும் செவ்வாய்க்கிழமை மீட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் குறித்து ஆண்டி மகன் சக்திவேல் (26) அளித்த புகாரின் பேரில், வாழப்பாடி காவல் ஆய்வாளா் பொறுப்பு சுப்பிரமணியம், கருமந்துறை உதவி ஆய்வாளா் வீரமுத்து ஆகியோா், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT