சேலம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரிய தொடங்கியது

DIN

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரியத் தொடங்கியது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை நொடிக்கு 13,274கன அடியிலிருந்து 9,432 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 12,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 58.80 டி.எம்.சி.யாக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், திங்கள்கிழமை காலை 95.46அடியாக இருந்த செவ்வாய்க்கிழமை காலை 95.21அடியாகச் சரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் அதிகரிப்பு: கால்நடைகள் மேய்ச்சல் நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியா்

வெப்ப அலை.. கவனம்!

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

திருச்செங்கோட்டில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் ஏலம்

SCROLL FOR NEXT