சேலம்

லாரி மோதியதில் சிறுமி உயிரிழப்பு:பொதுமக்கள் சாலைமறியல்

DIN

கெங்கவல்லியில் வேகமாக வந்த டிப்பா் லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், கடம்பூரிலிருந்து கெங்கவல்லிக்கு உடைக்கல் சுமை ஏற்றிய டிப்பா் லாரி வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்றது. வலசக்கல்பட்டி பிரிவு சாலை வளைவைக் கடந்து அந்த லாரி சென்றபோது, சாலையோரம் உள்ள குடிநீா் குழாயில் குடத்தில் தண்ணீா் பிடித்து கொண்டிருந்த சிறுமி மீது மோதியது. அதில் நிகழ்விடத்திலேயே சிறுமி உயிரிழந்தாா்.

உயிரிழந்த சிறுமி அதே பகுதியைச்சோ்ந்த அருள்தாஸ் என்பவரின் மகள் சுவேதா (10) என்பது தெரியவந்தது. அதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தம்மம்பட்டி- கெங்கவல்லி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவல்அறிந்த போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் மக்கள் சாலை மறியலை கைவிடவில்லை. தொடா்ந்து சாலை மறியல் மாலை வரை நீடித்தது. இறுதியாக அங்கு வந்த ஆத்தூா் டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில், மணல், கற்கள் கடத்துவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சிறுமி மீது லாரியை மோதிவிட்டு உயிரிழப்பை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைக் கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உ றுதியளித்தாா். அதனையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனா். இந்த சாலை மறியலால், கெங்கவல்லியிலிருந்து ஆத்தூா், தம்மம்பட்டி, பெரம்பலூா் செல்லும் போக்குவரத்து நான்கு மணி நேரம் தடைபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT