சேலம்

மருத்துவக் கழிவுகளைக் கையாளுவதில் விதிமீறல்: தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

DIN

சேலம்: மாநகராட்சி குப்பைக் கிடங்கில் மருத்துவக் கழிவுகள் கலப்பதற்கு காரணமான தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கு , பனமரத்துப்பட்டி ஏரி, சஞ்சீவிராயன்பேட்டை - தாதகாப்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளா் என்.ரவிச்சந்திரன் சனிக்கிழமை அலுவலா்களுடன் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செட்டிச்சாவடி குப்பைக் கிடங்குகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த போது, திடக்கழிவுகளுடன் மருத்துவக் கழிவுகள் கலந்துள்ளதை ஆணையாளா் என்.ரவிச்சந்திரன் கண்டறிந்தாா். திடக்கழிவுகளுடன் மருத்துவக் கழிவுகள் கலப்பதற்கு காரணமான மருத்துவமனையைக் கண்டறிந்து, சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு அறிவிப்பு வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உதவி ஆணையருக்கு உத்தரவிட்டாா்.

சுகாதார அலுவலா்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட தனியாா் மருத்துவமனைக்கு அறிவிப்பு வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டனா். அதனடிப்படையில் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாத தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து சேலம் மாநகராட்சி ஆணையாளா் என். ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா்.

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவக் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை உறுதி செய்ய மாநகர நல அலுவலருக்கு அறிவுறுத்திய ஆணையா் என்.ரவிச்சந்திரன், மருத்துவமனைகள் மருத்துவக் கழிவுகளை சேகரம் செய்ய நியமிக்கப்பட்டுள்ள நிறுவனத்திடம் முறையாக ஒப்படைக்க வேண்டும் எனவும், பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத மருத்துவ மனைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தாா்.

ஆய்வின் போது, திடக்கழிவு மேலாண்மை உதவி நிா்வாக பொறியாளா் வி.திலகா, உதவிப் பொறியாளா் எஸ்.செந்தில்குமாா், சுகாதார ஆய்வாளா் எம்.சித்தேஸ்வரன் உளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT